என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக சுகாதாரத்துறை"
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத மகப்பேறு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதன்மையாக விளங்குகிறது. இதேபோன்று மகப்பேறு இறப்பு சதவீதம் என்பது 5 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 62 ஆக இருந்தது. ஆனால் அது தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குறைந்த இறப்பு சதவீதம் ஆகும்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கான நிலைப்படுத்தும் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை விரிவுபடுத்தும் விதமாக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகளில் இத்தகைய நிலைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
சென்னை:
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன.
சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து விட்டு குட்கா விற்கப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக குட்கா நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் செங்குன்றம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அந்த கிடங்கு குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமானதாகும். அங்கு கணக்கில் வராத பல்வேறு மூலப் பொருட்கள் மற்றும் குட்கா பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குட்கா கிடங்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.
இதைத் தொடர்ந்து செங்குன்றத்தில் குட்கா வியாபாரி மாதவராவின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் இருந்தது.
மேலும் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்கு சென்னையில் உள்ள இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 23 பேருக்கு சுமார் ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல் இடம் பெற்றிருந்தது. டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் எந்தெந்த தேதிகளில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் கை மாறியது என்று எழுதப்பட்டிருந்தது.
இவர்கள் தவிர கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் குட்கா வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது.
அந்த ரகசிய டைரி மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த டைரியில் இடம் பெற்றிருந்த ஒரு அமைச்சர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு டெல்லியில் இருந்து வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. டைரியில் உள்ள தகவல்களையும் வருமான வரித்துறை அனுப்பியிருந்தது.
ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தவில்லை என்ற அதிருப்தி எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். கடந்த மே மாதம் இது தொடர்பான வழக்கை பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையை தொடங்கினார்கள். முதலில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தனர்.
நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் இருந்து மீண்டும் வந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான குட்கா வியாபாரி மாதவராவை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஏராளமான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். அந்த கேள்விகளை சரமாரியாக கேட்டு விசாரணை நடத்தப்பட்டது.
குட்கா விற்பதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது? ஒவ்வொரு அதிகாரியும் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள்? லஞ்சப் பணம் கைமாறியதில் யார்- யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
சில கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு கேட்டனர். இதனால் மாதவராவ் பல்வேறு உண்மைகளை கூறி இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்கள் பல கோடி லஞ்சம் கை மாறியதை உறுதிபடுத்தி இருப்பதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மதியம் விசாரணை முடிந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முறைகேடுகள் உறுதியாகி இருப்பதால் சோத்துப்பாக்கத்தில் உள்ள மாதவராவின் குட்கா குடோனுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனர். அதை ஏற்று சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அந்த கிடங்குக்கு சீல் வைத்தனர். ஏற்கனவே வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ள நிலையில் தற்போது சி.பி.ஐ.யும் அந்த கிடங்குக்கு சீல் வைத்துள்ளது.
இதற்கிடையே குட்கா வியாபாரி மாதவராவ் கொடுத்துள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இரு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்கி இருக்கும் நிலையில் சி.பி.ஐ.யின் வேகமான விசாரணை காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GutkhaScam #GutkhaCBIProbe
இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பழங்காலத்தில் வீட்டில் வைத்தே பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், இந்த காலத்திலும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடியும் எனவும் பலர் இணையதளத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீடியோ பார்த்தோ, திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எம்பிபிஎஸ் மருத்துவர்கள, பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க தகுதி பெற்றவர்கள்.
பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
வீட்டில் பிரசவம் பார்ப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 102, 104 ஆகிய எண்கள் மூலம் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம். 044-24350496/24334811 மற்றும் 9444340496 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HomeBirth #HomeBirthVideos #TNHealthDepartment
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.
இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்